Breaking News


வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்றுவதற்காக முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் மாகாணங்களுக்கு இடையில் ஒரு வாகனம் விற்பனை செய்யப்படும்போது நம்பர் பிளேட்டுகள் மாற்றப்பட வேண்டியிருப்பதால் வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் வாகனத் துறை பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு தனிப்பட்ட எண் வழங்கப்படுவதால், மோட்டார் வாகனத் துறையின் தரவுத்தளத்தின் மூலம் சரியான அடையாளத்தை எளிதில் அடையாளம் காண முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.