Breaking News


அனுராதபுரம் – பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் கப் ரக வாகனம் ஒன்று மோதியதில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

32 வயதான தாயும், மூன்றரை வயதுடைய மகனுமே உயிரிழந்தனர்.

நேற்று (15) மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனத்தில் 11 பேர் பயணித்துள்ளனர். இதில் 8 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகன ஓட்டுனர் உட்பட மூவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகாவ பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.