தற்போது திருகோணமலையில் இருந்து 500 கி.மீ தென்கிழக்கில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளியாக உருவாகும் என்று வளிமண்டலியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இலங்கை வழியாக இந்த சூறாவளி கடந்து செல்வதற்கான அதிக வாய்ப்பு இருப்பதால் நாடு முழுவதும் மழை மற்றும் காற்று அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது என்று திணைக்களம் மேலும் கூறுகிறது.
இந்த சூறாவளி நாளை மாலை அல்லது இரவு மட்டக்களப்பிற்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட இலங்கையின் கிழக்கு கரை வழியாக நாட்டுக்குள் வீசும்.
கிழக்கு, வடக்கு, வட மத்திய, வடமேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வட மத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் சில நேரங்களில் 80-90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
மற்ற இடங்களில், 60-70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments
Note: Only a member of this blog may post a comment.