Breaking News


இன்று 649 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், நாட்டின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 27,877 ஆக உயர்ந்தது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில், 451 பேர் பேலியகொட மீன் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து 197 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்

இதன்படி மினுவாங்கொட- பேலியகொட இரட்டை கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 24,322 ஆக அதிகரிக்கிறது.

இதேவேளை,  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 370 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர்.குணமடைந்தவர்களின் எணணிக்கை 20,460 ஆக உயர்ந்தது.

ஐந்து வெளிநாட்டினர் உட்பட 7,280 பேர் தற்போது நாடு முழுவதுமுள்ள 61 வைத்திசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் 461 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.