Breaking News


யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பிசிஆர் சோதனையில் 6 பேரே தொற்றிற்குள்ளானதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரும் இதே எண்ணிக்கையையே குறிப்பிட்டுள்ளார்.

சில தொழில்நுட்ப விவகாரங்களினால் தொற்றாளர்களின் இறுதி முடிவை பெற முடியாத நிலையை சுகாதார பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளதாக அறிகிறது. அதிகமானவர்களிற்கு ஒரேநாளில் பிசிஆர் சோதனை மேற்கொண்டதால் இந்த நிலையேற்பட்டுள்ளது.

106 இற்கும் அதிகமானவர்களின் முடிவு சந்தேகத்திற்கிடமான நிலைமையில் உள்ளதால், அவை மீள பரிசோதனைக்குள்ளாக்கப்படவுள்ளது.

தற்போது, 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 106 பேரின் மாதிரிகள் முடிவு தெரியாத நிலையில் உள்ளன. அவை நாளை மீண்டும் இரண்டாவது தடவையாக சோதனைக்குள்ளாக்கப்படவுள்ளன.

முடிவு சந்தேகத்திற்கிடமான மாதிரிகளில் கணிசமானவை இரண்டாவது பரிசோதனையில் நேர்மறையான முடிவை காட்டுவதே வழக்கம்.

மருதனார்மடத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரும், பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியும் முதலாவது பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமான முடிவை பெற்றனர். இரண்டாவது பரிசோனையில் மருதனார்மட நபர் தொற்று உறுதியானார். மற்றையவர் தொற்றிற்குள்ளாகியிருக்கவில்லை.

No comments

Note: Only a member of this blog may post a comment.