Breaking News


1989 ஆம் ஆண்டு கலவரத்தின்போது ஒருவரைக் குத்தி கொலை செய்துவிட்டு, அப்பகுதியை விட்டு வெளியேறி 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சந்தேகநபர் நேற்று முன்தினம் இரவு (08) கொலொன்ன பகுதயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு மாத்தறை உயர்நீதிமன்றத்தில் சந்தேகநபர் இல்லாமல் விசாரிக்கப்பட்டு, 1996 டிசம்பர் 16 அன்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், குற்றவாளிக்கு திறந்த பிடியாணை பிறப்பக்கப்பட்டது.

1989 நவம்பர் 3 அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில், உருமுட்ட கெஹெல்வலவில் ஒருவர் 16 முறை குத்திக் கொல்லப்பட்டுள்ளார். மல்லிகராச்சி
குணசேன (34) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே குத்திக் கொல்லப்பட்டார்.

அவரது உடலுக்கு அருகில் ‘பச்சை புலி தலைவருக்கு மரண தண்டனை ‘ என்று எழுதப்பட்டிருந்தது. யுத்தகாலத்தில் அந்த கொலையை, அரசியல்ரீதியாக திசைதிருப்பி ஜேவிபியில் கொலைப்பழியை போட அவர் இப்படி நாடகமாடியுள்ளார்.

எனினும், விசாரணை மேற்கொண்ட மாத்தறை குற்றப்புலனாய்வு பிரிவினர் அது தனிப்பட்ட குரோதத்தினால் நடந்தது என்பதை கண்டறிந்தனர்.

பொலிசார் நீண்டகாலமாக அவரை தேடி வந்தனர்.

தனது தோற்றத்தை மாற்றி, தலைமறைவாக இருந்த சந்தேக நபரை போலீஸ் குழு அடையாளம் கண்டு கொண்டனர். கொலை செய்யப்பட்ட 31 ஆண்டுகளுக்குப் பின்னரும், மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 24 ஆண்டுகளுக்குப் பின்னரும் 61 வயதான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்

No comments

Note: Only a member of this blog may post a comment.