Breaking News


மதுரையில் பெற்றோரை இழந்த சிறுமி 600 பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சென்னையில் 15 வயது சிறுமியை வி பசார த்தில் ஈடுபடுத்தி பலரால் பா லிய ல் வ ன்கொ டுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இந்த மாத தொடக்கத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மதன்குமார், அவருடைய தாய், சகோதரி உள்பட 10 பேரை முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக முக்கிய வி பசார தரகர்கள், சிறுமியை பா லிய ல் ப லா த்கா ரம் செய்தவர்கள் என பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, முத்துபாண்டி உள்பட 8 பேரும், மேலும் 2 பேர் என மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் சங்கிலி தொடர்போல் மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்த வினோபாஜி (38) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இவர், அந்த சிறுமியை தனி அறையில் வைத்து பா லிய ல் ப லாத்கா ரம் செய்ததுடன், போலீஸ் துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலருக்கும் தரகராக செயல்பட்டு 15 வயது சிறுமியை விருந்தாக்கியதாக கூறப்படுகிறது. பழைய கோணி வியாபாரம் செய்து வந்த இவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பகுதிநேர நிருபராக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைதான நிலையில், இன்னும் கைது படலம் தொடர்ந்து வருகிறது. சென்னையில் 16 வயது சிறுமி பா லிய ல் வ ன்கொ டுமை சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் அடங்காத நிலையில், அதை விட பன்மடங்கு பூதாகரமான சம்பவம் ஒன்று மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ளது.

பெற்றோரை இழந்த அந்த சிறுமி மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்தவர். கடந்த 2015ம் ஆண்டில் பத்து வயது சிறுமியாக உறவினர் ஜெயலெட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், 13 வயதில் வயதுக்கு வந்தபொழுது, ஜெயலட்சுமியின் கோர முகம் வெளிப்பட்டுள்ளது. பா லிய ல் தொழிலில் கொடிகட்டி பறந்த ஜெயலெட்சுமி மற்றும் அவருக்கு கீழ் தொழில் செய்யும் அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சின்னதம்பி என பலரும் அந்த சிறுமியை வைத்து பணம் பார்த்துள்ளனர்.

சிறுமிக்கு பா லிய ல் துன்பம் இழைத்தவர்களை கைது செய்ய வேண்டுமென்றால் ஒரு புதிய சிறையையே கட்ட வேண்டும் என்ற அளவுக்கு கொடுமை நடைபெற்றிருக்கிறது. 3 ஆண்டுகளாக 600 பேரின் பா லிய ல் வே ட்கைக்கு இரையானதாக கதறுகிறார் அந்த சிறுமி.

13 வயது முதல் பா லிய ல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டேன். 3 ஆண்டுகளில் 600 பேரால் பலா த்கா ரம் செய்யப்பட்டேன் என அந்த சிறுமி போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். மதுரை சிறுமியின் வாக்குமூலத்தை கேட்டு காவல் துறையும் அதிர்ந்து போய் கிடக்கிறது.

அதே சமயம் போலீசார் பல முறை மாறுவேடங்களில் சென்று கைது செய்ய முயற்சித்தும், கண்இமைக்கும் நேரத்தில் டிமிக்கி கொடுத்திருக்கிறார் ஜெயலெட்சுமி.

மதுரை வி.ஐ.பி. நகர் பகுதியில் சிறுமியை மீட்ட போது, சரவணபிரபு என்பவர் மட்டுமே போலீசார் வசம் சிக்கியுள்ளார். 600 பேரையும் பிடித்தே ஆக வேண்டும் என போலீசார் கங்கனம் கட்டி கொண்டு தனிப்படையும் அமைத்துள்ளனர்.

சென்னை, மதுரை என அடுத்தடுத்து வெளியாகும் சிறுமிகள் மீதான பா லிய ல் தாக்குதல்கள், பெற்றோர் நெஞ்சை பதற வைக்க, இன்னும் வெளிஉலகுக்கு தெரியாமல் இதுபோல பல சிறுமிகள் மாட்டி கொண்டிருக்கின்றனர் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் அதிர வைக்கின்றனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.