Breaking News


நாட்டின் மிக இளைய கொரோனா மரணம் இன்று பதிவாகியது. பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இன்று (08) 20 நாளான பச்சிளங்குழந்தை உயிரிழந்தது.

பிறந்து  20 நாள் குழந்தை கொரோனா தொற்றிற்குள்ளாகி, நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குழந்தை நேற்று இரவு (07) கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, குழந்தை கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் பி.சி.ஆர் சோதனைகளில் குழந்தை கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இருப்பினும், பி.சி.ஆர் சோதனைகள் குழந்தையின் பெற்றோருக்கு கோவிட் நோயால் பாதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.