Breaking News


மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் பலர் ஆபத்தான நிலைமையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை அமைதியின்மையில் காயமடைந்த 52 பேர் ராகம வைத்தியசாலையி் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சிறை அதிகாரிகளும் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

சிறைச்சாலையிலிருந்த கைதிகள் குழு தப்பிச் செல்ல முயன்றபோது, அதை தடுக்க சிறை அதிகாரிகள் பலத்தைப் பயன்படுத்தியதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் ஒரு தொகுதி கைதிகளிற்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கைதிகள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

சிறை அதிகாரிகளை திசை திருப்பும் முயற்சியாக கைதிகள் பல பொருட்களுக்கு தீ வைத்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டனர.

தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, பெரு முயற்சியின் பின்னர் இன்று காலை தீ அணைக்கப்பட்டது

No comments

Note: Only a member of this blog may post a comment.