பொதுச் சுகாதாரப் பரிசோதகரை தகாதவார்த்தையால் அச்சுறுத்திய நபர் ஒருவர் மல்லாகம் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி வெளிமாவட்டத்தில் இருந்து வந்ததாக வடலியடைப்பு பண்டத்தரிப்பு கலைவாணி வீதி பகுதியில் 27 வயதுடை நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
முதலாம் திகதி குறித்த நபர் வெளியில் சென்றுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தகவலறிந்த அப்பகுதி சுகாதார பரிசோதகர் குறித்த நபரை விசாரிக்க சென்றுள்ளார்.
அப்போது அந்த நபர் சுகாதாரப்பரிசோதகரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். உடனடியாக சுகாதாரப்பரிசோதகர் இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனடிப்படையில் குறித்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் நேற்று (04) முற்படுத்தப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்
No comments
Note: Only a member of this blog may post a comment.