நாளை 24.11.2020 செவ்வாய்க்கிழமை காலை 7. 00 மணிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை (PCR) கொழும்பு, யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் போன்றோருக்கு ஆரம்ப சுகாதார பரிசோதனை நிலையம் பிரதான வீதி மடத்தடி என்னுமிடத்தில் நடைபெற உள்ளது.
கொழும்பு - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் அனைத்து சாரதிகள் மற்றும் உதவியாளர்களை இப் பரிசோதனையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் அதற்கு முதல் நாள் 23. 11. 2020 திங்கட்கிழமை 11:00 மணிக்கு முன்பாக கொழும்பு யாழ்ப்பாண சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் உதவியாளர்களின் முழு விபரங்களையும்
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மாநகர சபை யாழ்ப்பாணம் ( நல்லூர் சிவன் கோயிலுக்கு அருகில்) உள்ள அலுவலகத்தில் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இனிவரும் காலங்களில் மேற்படி பரிசோதனை செய்யாத சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள் என சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளார்கள்
No comments
Note: Only a member of this blog may post a comment.