வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பெரும் நிதி மோசடி இடம்பெற்றது மத்திய கணக்காய்வு திணைக்களத்தினால் அண்மையில் கண்டறியப்பட்டிருந்தது. இதில் சுமார் 1.60 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் கணக்காய்வு திணைக்களம் நடத்திய தொடர் விசாரணையில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பெரும் நிதி மோசடி தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலியாக ஆசிரியர்களின் தகவல்களை உள்ளடக்கி பண மோசடி இடம்பெற்றுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் 2.20கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் வவுனியா வடக்கு கல்வி வலயத்திலுள்ள சில தனி நபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணைகள் நடந்து வருவதால் இந்த தொகையே இறுதியானது என கூற முடியாது என கணக்காய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுவரை யாரும் கைதாகவில்லை.
இதையடுத்து, மாகாண கல்வியமைச்சின் செயலாளர், வடக்கு கல்வித்திணைக்கள பணிப்பாளர், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர், மாகாண கணக்காய்வாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனடியாக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (6) கொழும்பில் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்பதால், நேற்று இரவோடிரவாக யாழிலிருந்து புறப்பட்டு சென்றனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.