Breaking News


யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைகோரி யாழ்ப்பாண பொலிசார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனு மீதான கட்டளை வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

இந்த வழக்கு விசாரணையின்போது சுவாரஸ்ய சம்பவமொன்று இடம்பெற்றது.

38 பேரின் பெயர் குறிப்பிட்டு, அவர்கள் மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதிக்கும்படி பொலிசார் கோரிக்கை விடுத்தனர். அந்த பட்டியலில் எம்.ஏ.சுமந்திரனின் பெயரும் இருந்தது. அதுதவிர, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன், க.சுகாஷ் உள்ளிட்டவர்களின் பெயர் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை கேட்டதும் சுமந்திரனிற்கு பயங்கர கோபம். ஆயுதப்போராட்டத்தை தான் ஆதரிக்கவில்லையென பகிரங்கமாக சொல்லும் சுமந்திரன்- விடுதலைப் புலிகள் தொடர்பில் உள்ளார்ந்த ரீதியில் எதிர்ப்புணர்வை கொண்டவர். இந்த நிலையில் ஆயுதப் போராட்ட இயக்கத்தில் உயிரிழந்தவர்களை அஞ்சலி செலுத்த முயற்சித்தார் என்றால் அவர் இயல்பாகவே கோபமடைவார் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.

அதுதான் இன்று நடந்தது.

யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை ஒரு பிடி பிடித்து விட்டார்.

தடைசெய்யப்பட்ட இயக்கத்தை அஞ்சலி செலுத்த தடை விதிக்குமாறு கோரியுள்ள பொலிசார், அப்படியான அஞ்சலி நிகழ்விற்கு தான் முயன்றேன் என்பதற்கு என்ன சான்று வைத்துள்ளார்கள் என கேள்வியெழுப்பினார். தான் அஞ்சலி செலுத்த முயன்றதற்கான ஆதாரமிருந்தால், பொலிஸ் பொறுப்பதிகாரி கூண்டில் ஏறி, பொலிஸ் புத்தகத்தின் மீது சத்தியம் செய்ய வேண்டுமென கோபமாக குறிப்பிட்டார்.

அத்துடன், போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தினால் அந்த குற்றச்சாட்டை சுமத்துபவர்களின் சீருடையை கழற்றுவேன் (சட்டவழிமுறையூடாக) என்றும் நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.

இப்படியான ஆக்ரோசமான வாதத்தை எதிர்பார்க்காத பொலிசார் திண்டாடி விட்டனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.