மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, பதற்றம் நீடித்து வருகிறது. சிறைச்சாலைக்குள் பெரும் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது ஒரு கைதி கொல்லப்பட்டுள்ளார். 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகள் குழுவொக்று பிரதான வாயிலை உடைக்க முயன்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இன்று இரவு 7.30 மணியளவில், சிறைக்குள் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டன.
சிறைச்சாலையின் அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பல பொலிஸ் குழுக்களும், அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்களும் உள்ளே வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கைதிகளின் உறவினர்கள் பிரதான வாயிலுக்கு அருகே கலவரத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களது உறவினர்களுக்கு என்ன ஆனது என கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகர சிறைச்சாலையில் 183 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும், சிறைச்சாலைகளில் 1,000 இற்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.