பூநகரி பிரதேச சபையின் செயலாளர் தொடர்பில் தனது முகநூலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முழங்காவில் பிரதேச செயற்பாட்டாளர் ஒருவர் அவதூறு செய்தார் எனத் தெரிவித்து பூநகரி பிரதேச சபையின் செயலாளர் க. கம்சநாதன் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த நபர் தனது பதவி நிலைக்கு அவதூறு ஏற்படுகின்ற வகையில் முகநூலில்
பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்றும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் எனவும் செயலாளர் தனது முறைப்பாட்டில் பதிவு
செய்துள்ளார்.
இன்றைய தினம் பூநகரி பொலீஸ் நிலையத்தில் குறித்த நபர் முகநூலில்
பதிவேற்றிய பிரதியுடன் சென்ற செயலாளர் தனது முறைப்பாட்டை பதிவு
செய்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியினருடன் நெருக்கமாக செயற்பட்டு வந்த செயலாளர் கம்சநாதனும், கிளிநொச்சி எம்.பி சிறிதரனிற்கு முரண்பாடு ஏற்பட்டதும், அவரை இடமாற்றம் செய்யுமாறு உள்ளூராட்சி ஆணையாளரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்பின்னர், “அரசியல் அடியாட்களை“ போல கிளிநொச்சி தமிழ் அரசு கட்சியினர் செயலாளருடன் தகராற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் முழங்காவில் தமிழ் அரசு கட்சி உறுப்பினர் அநாகரிகமாக முகநூலில் பதிவிட, கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் வட்டிக்கடை ஜீவன், மேலும் அநாகரிகமாக கருத்திட்டுள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.