முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிசார், இராணுவத்தினர் மற்றும், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் செயற்பாடுகளுக்கு மத்தியில் துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அளம்பில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இன்று (20) முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள் இணைந்து துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பொலிசார், அங்கு துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அழைத்து அந்தபகுதி இராணுவத்திற்கு உரியதெனவும், துயிலுமில்ல வளாகத்திலிருந்து விலகிச் செல்லுமாறும் கூறியிருந்தனர்.
இதேவேளை அப்பகுதிக்கு வந்த புலனய்வாளர்கள் மற்றும், இராணுவத்தினர் அங்கு துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம், வீடியோ எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தனர்.
இருப்பினும் அச்சுறுத்தல் செயற்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழர் தரப்பு துப்பரவுப் பணிகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.