அதிகமாக பகிர்ந்து உதவுங்கள். அரிய சந்தர்ப்பம். எமது இளையோருக்கானது. - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

அதிகமாக பகிர்ந்து உதவுங்கள். அரிய சந்தர்ப்பம். எமது இளையோருக்கானது.

#கமநல_அபிவிருத்தித்_திணைக்களத்திற்கு
(MN-01 -2016) விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் III ஆம் தரத்திற்கு உத்தியோகத்தர்களை 
ஆட்சேர்ப்பு செய்வதன் பொருட்டான திறந்த போட்டிப் பரீட்சை- 2020

மேற்படி பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான விபரம் 29.10.2020ஆம் திகதிய வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 500 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இந்நியமனம் தேசிய ரீதியிலன்றி மாவட்ட மட்டத்தில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில்  மாவட்ட ரீதியில் நியமிக்கப்படவுள்ளது. எமது மாகாணங்களில் உள்ள இளைஞர்களுக்கு உதவுங்கள். கடந்த காலங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து நியமிக்கப்பட்டனர். முதல்முறையாக எமது மாவட்டங்களுக்கு அரிய வாய்ப்பு.

பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட இருக்கும் பரீட்சையின் புள்ளிகளில் அடிப்படையிலேயே நியமனம். நேர்முகத் தேர்விற்கு புள்ளிகள் இல்லை. 

#இறுதி_திகதி: 04.12.2020
#அனுப்ப_வேண்டிய_முகவரி- பூரணப்படுத்தப்பட்ட 
விண்ணப்பப்படிவத்தை, ''பரீட்சை ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு (தாபன மற்றும் வெளிநாட்டுப் 
பரீட்சைகள்) கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்ல''
#அனுப்பும்_முறை- பதிவுத் 
தபாலில் மட்டும் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

#கல்வித்_தகைமைகள் :
(அ) சிங்களம்/தமிழ்/ஆங்கில மொழி, கணிதம் மற்றும் ஏனைய இரு பாடங்களில் திறமைச் சித்தி உள்ளடங்கலாக 
ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதர பத்திர (சாதாரண தர) பரீட்சையில் சித்தி 
பெற்றிருத்தல்.
மற்றும்
(ஆ) கல்விப் பொதுத் தராதர பத்திர (உயர் தர) பரீட்சையில் ஆகக் குறைந்தது ஒரு பாடத்திலேனும் (01) (பொது 
வினாப்பத்திரம் தவிர) சித்தியடைந்திருத்தல்.

#வயதெல்லை: விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினத்தன்று வயது 18 இற்குக் குறையாத 30 இற்கு மேற்படாத நபராக இருத்தல் வேண்டும்.

#பரீட்சை_கட்டணத்தை_செலுத்தல்- ரூபாய் 600 இனை தபாலகம்/உப தபாலகம்/ கமநல சேவைகள் நிலையங்களில் செலுத்த முடியும்.

மேலதிக விபரங்களுக்கு வர்த்தமானியினை பார்வையிடவும்- http://www.documents.gov.lk/files/gz/2020/10/2020-10-30(I-IIA)T.pdf
http://www.documents.gov.lk/files/gz/2020/10/2020-10-30(I-IIA)T.pdf