கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று நூற்றுக்கணக்கான
இராணுவனத்தினர் மற்றும் பொலீஸார் துப்பாக்கிகள் சகிதம் குவிக்கப்பட்டு
எவரும் உட்செல்லாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை எவரேனும் ஒருவர் கூட விளக்கேற்றி
நடத்திவிடக் கூடாது என்பதில் இராணுவம் மற்றும் பொலீஸார் மிக கவனமாக
செயற்பட்டனர். கற்பூரம் பத்தி ஆகியவற்றுடன் துயிலுமில்லத்திற்கு
முன்பாக நின்ற இளைஞர்களை கூட பொலீஸார் நிற்க விடாது விரட்டி விட்டனர்.
அருகில் இருந்த கோவில்களுக்கு கூட இன்று வெள்ளிக்கிழமை பொது மக்கள்
எவரும் செல்லாதவாறு பொலீஸார் தடை விதித்திருந்தனர்.
கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை சுற்றி இராணுவத்தினர்
குவிக்கப்பட்டிருந்தோடு, கலகம் அடக்கும் பொலீஸார் கண்ணீர் புகை
குண்டுகளுடன் பொல்லுகளுடனும் காணப்பட்டனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.