Breaking News


சுவிட்சர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட பெண்ணொருவர் சிரியாவுக்கு தப்பிக்க முயற்சி செய்துள்ளதாகவும் அவர் ஒரு ஜிகாத் தீவிரவாதி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் வர்த்தக நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது

.இந்த தாக்குதலை மேற்கொண்ட 28 வயதுடைய சுவிட்சர்லாந்து பெண்மணி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுவிட்ர்சர்லாந்தில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலை மேற்கொண்டவர் இணையம் மூலம் தீவிரவாதியொருவருடன் உறவை ஏற்படுத்திசக்கொண்டு சிரியாவிற்கு செல்ல முயன்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாலிய மக்கள் அதிகமாக வாழும் இடம்பெற்ற இந்த சம்பவம் பயங்கரவாத வன்முறை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.