கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று (2) மத வழிபாடுகளில் ஈடுபடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று இந்து ஆலயங்களில் வழிபாடு நடத்துமாறு கேட்டுள்ளார்.
இதற்குள், நேற்று நாட்டின் முக்கிய கங்கைகளில் மந்திரிக்கப்பட்ட தண்ணீரை அமைச்சர்கள் கலந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பிரதமரின் மருத்துவர் என கூறும் எலியந்த வைட் வழங்கிய மந்திரிக்கப்பட்ட தண்ணீர் பானைகளை அமைச்சர்கள் பவித்ரா வன்னியாராச்சி களு கங்கையிலும், பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில ஆகியோர் களனி கங்கையின் வெவ்வேறு இடங்களிலும் தண்ணீரை கலந்தனர்.
இதேபோல நாட்டின் பல பகுதிகளிலுள்ள கங்கைகளில் மந்திரிக்கப்பட்ட தண்ணீரை கலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எலியந்த வைட் உலகளவில் பிரபலமான வைத்தியர் ஆவார். சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் ஆகியோர் அவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.