பிக்பொஸ் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் அண்மையில் கனடாவில் மாரடைப்பினால் உயிரிழந்திருந்தார். லொஸ்லியாவின் அபிமானிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், லொஸ்லியாவின் தந்தை பற்றிய பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு கரும்புள்ளியாக- இந்திய இராணுவத்தின் துணைப்படையாக பதிவான ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பில் உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
இந்திய படைகளுடன் இணைந்து விடுதலைப் புலிகளிற்கும், தமிழ் மக்களிற்கும் எதிராக செயற்பட்ட ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பில் இயங்கிய அவரது சகோதரனை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அவர் 1983 முதல் ஆயுத இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளார்