கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் தேநீர் கடை ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த இளைஞன் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மயில்வாகனபுரம் பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் சுலக்சன் (வயது 20) என்பவரே தாக்குதலுக்கு இலக்கானவராவார்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments
Note: Only a member of this blog may post a comment.