கிளிநொச்சியிலும் மாவீரர் நாளை நினைவு கூர நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தின் தலைமை பொலீஸ் அதிகாரியினால் இத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவான பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனுக்கு எதிராக
பெறப்பட்டு இன்று (20) அவரிடம் பொலீஸாரினால் கையளிக்கபபட்டுள்ளது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679 /20 என்ற வழக்கின்
பிரகாரம் 21.112020 தொடக்கம் 27.11.2020 வரையான நாட்களில் எந்தவிதமான
அஞ்சலி நிகழ்வுகள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கட்டளை ளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜீவகஸ்தவினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் இன்று காலை 9.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது
No comments
Note: Only a member of this blog may post a comment.