Breaking News


கார்த்திகை விளக்கீட்டில் விளக்கேற்றவும் தமிழ் மக்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கார்த்திகை விளக்கீடான இன்று சைவ மக்கள் வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றுவது பாரம்பரிய வழக்கம். எனினும், இம்முறை மாவீரர்தின பீதியிலுள்ள அரச இயந்திரங்கள், தமிழர்களின் பாரம்பரிய வழக்கங்களிற்கும் தடைவிதித்துள்ளன.

இன்று யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் ஆலயங்களில் விளக்கேற்றுவதில் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் செக்கப்பானை எரிக்க தயாரான போது, சுன்னாகம் பொலிசார் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். எனினும், பின்னர் அதற்கு அனுமதித்தனர்.

மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போது, அதை அனுமதிக்க முடியாது என கூறி கால்களினால் தட்டி பொலிசார் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக ஆலய நிர்வாகம் குற்றம்சுமத்தியுள்ளது.

கோட்டாபய அரசில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கஜன் இராமநாதனும், டக்ளஸ் தேவானந்தாவும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.





No comments

Note: Only a member of this blog may post a comment.