இரு நாட்கள் முன் திருமலை நகராட்சிமன்ற எல்லைக்கட்பட்ட முருகாபுரியில் ஏற்பட்ட விபத்தில் குறுக்கால் ஓடிய மாட்டின் மீது முச்சக்கரவண்டி மோதியதை தொடர்ந்து ஒருவர் உயிரிழப்பை அடுத்து அதிரடியாக வீதியில் அலைந்த 50மாடுகளை பிடித்து அடைத்துள்ளார்கள்.
திருகோணமலை நகராட்சிமன்றங்களில் அண்மைக்காலமாக பிரதான வீதிகள் போக்குவரத்து நெரிசலான இடங்களில் மாடுகள் குறுக்கு மறுக்காக ஓடுவதால் பல விபத்துகள் இடம்பெற்றது இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவரும் அவரது வாகனங்களுமே சேதமடைந்தது இதனால் மாடு உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ளாமல் அசமந்தமாக இருந்தார்கள்.
இப்படி கட்டாக்காலி மாடுகளை அடைத்து அதன் உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் பெற்றால்தான் திருந்துவார்கள் என்பதை கவனத்தில் எடுத்த நகராட்சி மன்றம் முதற்கட்டமாக வீதியில் நடமாடிய 17மாடுகளை அடைத்துள்ளார்கள்.
இன்னமும் கட்டாக்காலி மாடு தொல்லை அதிகரித்தால் இதை விட மாடுகளின் எஜமானருக்கு வழக்கு வைத்து அபராதம் விதித்து நீதிமன்றம் என அழைய விட்டால்தான் திருந்துவார்கள்,
No comments
Note: Only a member of this blog may post a comment.