Breaking News


உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்துவதில் சாதாரண சிங்கள மக்களாகிய எமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஏனெனில் நீங்களும் நாமும் சகோதரர்கள். இருவருக்கும் இந்த நாடு சொந்தமானது என தனது முகநூலில் தமிழில் பதிவிட்டுள்ளார் எஸ். ரதன தேரர் என்ற பௌத்த துறவு.

அவரது முகநூல் பதிவு வருமாறு-

நான் எங்கள் சகோதர தமிழ் மக்களுக்கு அன்போடு எழுதுகின்றேன்…
உங்கள் இறந்தவர்கள் கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்த ஒரு அட்சேபனையும் கோபமும் இல்லை.

ஏனென்றால் நீங்களும் உங்கள் இறந்த மக்களும் இந்த நாட்டில் பிறந்த எங்கள் சகோதர சகோதரிகள் போல தான். சிங்கள மக்கள் போலவே நீங்களும் இந்த நாட்டையும் நேசிக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் இது உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள நாடு.

நீங்கள் தமிழ் என்பதால் எங்களுக்கு உங்கள் மீது சிறப்பு வெறுப்பு இல்லை.
நாம் ஒரு உண்மையான பவுத்தர்களாக இருந்தால் அவ்வாறு செய்வதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் எந்தஒரு வாய்ப்பும் இல்லை.

உங்கள் சகோதரத்தின் கைகளை நாங்கள் ஒரு போதும் மறுக்க மாட்டோம்.
உங்கள் சகோதரத்துவத்தை தழுவதற்கு நாங்கள் தயங்குவதில்லை.

எனது நாடு என வார்த்தை விட எங்கள்நாடு என வார்த்தை நேசிப்போம்.
எல்லா தவறான எண்ணங்களிலிருந்தும் விடுபடுவோம். மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை கொடுப்போம்.

No comments

Note: Only a member of this blog may post a comment.