திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3ம் கட்டை வளர்மதி வீதியை சேர்ந்த அருணண்(36வயது) முச்சக்கர வண்டி ஓடி வந்தவர் உயிரிழந்துள்ளார்.
இவர் இலங்கை போக்குவரத்துச் சபை திருகோணமலை கிளையில் காப்பாளராக கடமையாற்றி வருபவராவர்,
முச்சக்கரவண்டியில் தனது தந்தையை மரத்தடி பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று மீண்டும் அவரது வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்த போதே முருகாபுரி பகுதியில் குறுக்கே வந்த மாட்டுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது,
No comments
Note: Only a member of this blog may post a comment.