மகன் மீட்பு; தலைமறைவான பெண்ணை தேடி வேட்டை: ஹெரோயின் கடத்துபவராம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மகன் மீட்பு; தலைமறைவான பெண்ணை தேடி வேட்டை: ஹெரோயின் கடத்துபவராம்!


ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தப்பியோடிய தாயையும், மகனையும் தேடி நடத்தப்பட்டு வரும் நடவடிக்கையில் மகன் சிக்கியுள்ளார். எஹெலியகொட – யாய வீதியில் உள்ள ஒரு வீட்டில் மகன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய தாய் 25 வயதானவர். தனது 2 வயது மகனுடன் நேற்று இரவு 9.10 மணியளவில் தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், இன்று வீடொன்றிலிருந்து மகனை பொலிசார் அடையாளம் கண்டனர். அவரை சுகாதார அதிகாரி அலுவலகம் மூலம் ஐ.டி.எச் மருத்துவமனைக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைமறைவான பெண் பெரிய அளவிலான ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர். அவரை கண்டுபிடிக்க பொலிசார் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.