Breaking News


யாழ்ப்பாணத்திற்கு இன்று அமைச்சர்கள் பட்டாளம் படையெடுக்கும் என சொல்லப்பட்டிருந்தாலும், முக்கிய அமைச்சர்கள் இறுதி நேரத்தில் தமது பயணத்தை இரத்து செய்துள்ளனர்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான முதலாவது கூட்டம் இன்று (6) வெள்ளிக்கிழமை யாழ் மாவட்டச் செயலகக் கேட்போர்கூடத்தில் ஆரம்பித்துள்ளது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோரும் 07 இராஜாங்க அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்னும், அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும ஆகியோர் இன்றைய கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை

No comments

Note: Only a member of this blog may post a comment.