கொரோனா தடுப்பு முறைகளை கடைப்பிடிக்காமல் செயற்பட்ட யூரியூப் குழுவொன்றைப் பற்றி முகநூலில் சுட்டிக்காட்டியவர் மீது, அந்தகுழு வீடு புகுந்து தாக்குல் நடத்தி, அவரது கைத் தொலைபேசியை பறித்த கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்கொடியென்ற பெயரில் குழுவொன்று யூரியூப் தளத்தில் செயற்பட்டு வருகிறது. குடும்ப விவகாரங்களிற்குள் கட்டப்பஞ்சாயத்து பாணியி் புகுந்து செயற்படுவதாக அந்த குழு மீது சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் விசுவமடு பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட மகன் என ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில் சிறுவனை வற்புறுத்தி கருத்து தெரிவிக்க வைக்க முயல்கிறார்கள், நிர்வாக நடைமுறைகளின்படி கையாள வேண்டிய விவகாரத்தை நெறி மீது கையாண்டார்கள் என்ற விமர்சனங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், ஊடகச் செயற்பட்டாளர் ஒருவர் அது குறித்து பதிவிட்டிருந்தார்.
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அந்த குழு செயற்பட்டது. இது சமூகத்தை பேரழிவிற்குள் தள்ளும் நடவடிக்கையாகும்
தமது தவறை ஏற்றுக்கொள்ளாத தமிழ்கொடி பணியாளர்கள், குறிப்பிட்ட ஊடகச் செயற்பாட்டாளரை தொலைபேசியில் மிரட்டி, அந்த பதிவை அழிக்க வற்புறுத்தினர். அவர் மறுத்தபோது, வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதுடன்,அவரது கையடக்க தொலைபேசியையும் பறித்து சென்றனர்.
இந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலுடன் பெண் ஒருவரும் சென்றிருந்தார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட தமிழ்கொடி குழுவை சேர்ந்த 3 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமல், கிசோகுமார், ஜீவமயூரன் ஆகிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
No comments
Note: Only a member of this blog may post a comment.