Breaking News


அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி செயற்பட்டதால், இந்த இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் யாழ் மாநகரசபை உறுப்பினரான வி.மணிவண்ணனே, கஜேந்திரகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தயாராகி வருவதாக அறிய வருகிறது.

இறுதியாக இடம்பெற்ற யாழ் மாநகரசபை அமர்வில் வி.மணிவண்ணன் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, யாழ் மத்திய பேருந்து நிலைய அப்பிள் மற்றும் பழ வியாபாரிகள் குறித்து ஆராயப்பட்டது.

மத்திய பேருந்து நிலைய அபிவிருத்திக்காக அந்த பகுதியிலுள்ள பழவியாபாரிகளை அகற்ற தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பழ வியாபாரிகளின் பிரச்சனையை ஆராய குழுவொன்று நியமிக்கபப்பட்டது.

உறுப்பினர் தெரிவின்போது, மணிவண்ணனின் பெயரை அவரது கட்சியை சேர்ந்த வரதராஜன் முன்மொழிந்தார். இதன்படி, மணிவண்ணன் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த கஜேந்திரகுமார், தனது மற்றும் கட்சி தலைவரின் கையொப்பத்துடன், யாழ் மாநகரசபை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தின்படி, எமது கட்சியை சேர்ச்த மணிவண்ணன் என்பவரை கட்சியை விட்டு நீக்கி விட்டோம். ஆனால் அவர் யாழ் மாநகரசபை அமர்வுகளில் மட்டும் கலந்து கொண்டிகிறார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஒருவரை இந்த பொறுப்பி்ற்கு நியமித்துள்ளீர்கள். உடனடியாக மணிவண்ணனை அந்த பொறுப்பிலிருந்து நீக்கி, எமது கட்சியை சேர்ந்த இன்னொருவரை நியமியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மணிவண்ணனின் நீக்கத்திற்கு யாழ் நீதிமன்றம் இடைக்கால விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படும் விதமாக கஜேந்திரகுமாரின் கடிதம் அமைந்துள்ளதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரை மணிவண்ணன் தரப்பு நடவடிக்கையெடுத்துள்ளதாக அறிய வருகிறது

No comments

Note: Only a member of this blog may post a comment.