சிசிரிவியில் சிக்கிய சிறுமிக்கு சாரத்தை தூக்கிக் காண்பித்த காமுகன்: விசாரணை ஆரம்பம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

சிசிரிவியில் சிக்கிய சிறுமிக்கு சாரத்தை தூக்கிக் காண்பித்த காமுகன்: விசாரணை ஆரம்பம்!


சிறுமிக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்த ஆசாமி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு இது தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

பௌத்த வழிபாட்டிடமொன்றில் வழிபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் சிறுமியொருவர் அந்த பகுதிக்கு வந்தபோது, தனது சாரத்தை உயர்த்தி மர்ம உறுப்பை காண்பித்தார்.

இது தொடர்பாக சிசிரிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு விசாரணையை தொடங்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்சவும் கருத்து தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் தொடர்பில் தமது அமைச்சும் விசாரணை நடத்துமென்றார்.

சம்பவம் குறித்து விசாரிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள், அதே நேரத்தில் அமைச்சர் நிஷாந்த இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து அவதானிப்பார் என நாமல் தெரிவித்தார்