கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
எதிர்வரும் 27ஆம் திகதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் நாள் என்பதால் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணியினை மேற்கொண்டிருந்தனர்.
இத தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று காலை, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் வேளமாழிகிதன் உள்ளிட்ட பலரால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அவ்விடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், சகாதார நடைமுறையினை பின்பற்றாது செயற்படுவதாகவும் துப்பரவு பணிக்கு அனுமதி வழங்கியது யார் எனவும் வினவியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஏனையோரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார நடைமுறையினை பின்பற்றி துப்பரவு பணியினை தொடர்ந்தும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Note: Only a member of this blog may post a comment.