மன்னாரில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.
இதன் போது மாலை 6.5 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் பொது இடங்களில் மாவீரர் நினைவேந்தல் நடாத்த நீதிமன்றம் தடை விதித்த நிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்களை ஒன்றுகூட்டாது பிரத்தியேக இடம் ஒன்றில் நினைவேந்தல் இடம் பெற்றது.
இதே வேளை வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் நடாத்த நீதிமன்றம் தடை விதித்த நிலையில் பல்வேறு இடங்களில் மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.