வாழைச்சேனையில் பிரசித்தி பெற்ற ஆலயமான ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட வழிப் பிள்ளையார் உருவச் சிலை, இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பாக ஆலய காவலாளி தமக்கு தெரியப்படுத்தியதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
70 வருட கால பழமை வாய்ந்த இரண்டரை அடி உயரமுள்ள குறித்த சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சமபவம் தொடர்பாக மட்டக்களப்பு தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
தற்போது தனிமைப் படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.