மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள மகிழடித்தீவு கிராமத்தில் அன்றாட கூலித்தொழிலாளியான வேலாச்சி இளையதம்பி என்பவர் (56) நேற்று இரவு உயிர் இழந்தார்.
இந்த இறப்பு தொடர்பாக அவரின் உறவினர் ஒருவர் கூறுகையில்- தமது உறவினர் பொலன்றுவையில் வயல் கூலித்தொழிலுக்காக சென்று கடந்த 5ஆம் திகதி தமது ஊருக்கு (மகிழடித்தீவு) வந்தபோது அவரை தனிமைப்படுத்துமாறு சுகாதாரபகுதி அலுவலர்கள் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு வயிற்றோட்டமும் ஆஸ்மா நோயும் இருந்தது. ஆனால் வயிற்றோட்டம் ஆஸ்மா நோய் சிகிச்சைகளை தனிமைப்படுத்தலின் பின்பு எவருமே செய்யவில்லை.
அவர் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் வேறு எவரும் செல்ல முடியாத காரணத்தால் எந்த மருந்துகளும் அவருக்கு்முறைப்படி வழங்கவில்லை. சுகாதாரப்பகுதிகளை சேர்ந்தவர்கள் அவரை தனிமைப்படுத்தலுக்காக கொரோனா நோயில் இருந்து பாதுகாப்பதை மட்டுமே கையாண்டனர். ஆனால் அவரது நோய் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. அவரின் வீட்டில் இருந்து 300மீற்றர் தூரத்தில்தான் பிரதேச சுகாதார அத்தியட்சகரின் காரியாலயமும் மகிழடித்தீவு வைத்தியசாலையும் அமைந்திருந்தபோதும் அவர் கவனக்குறைவால் இறந்துவிட்டதாகவும் இது சுகாதாரப்பகுதியினரின் கவனக்குறைவு எனவும் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.
நேற்று மாலை இவர் சுய தனிமைப்படுத்தில் இறத்தபோது பலர் கொரோனாவினால் தமது உறவினர் இறந்ததாக தெரிவித்தனர். பின்பு சுகாதார வைத்திய பரிசோதனையின் பின்பு அவர் கொரோனாவினால் இறக்கவில்லை என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் வேறு ஒரு நோயால் இவர் இறந்திருக்கிறார் என்பது தெளிவு. எனவே அவரின் வேறு நோய்க்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாமை சுகாதார திணைக்கள ஊழியர்களின் அசமந்தப்மோக்கு என தெரிவித்தார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.