கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றிலிருந்து 506 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்த சந்தர்ப்பம் இதுவாகும். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,905 ஆக அதிகரித்துள்ளது.
7 வெளிநாட்டினர் உட்பட 5,738 பேர் தற்போது நாடு முழுவதும் 45 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹம்பந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து 113 பேர், கம்புருகமுவ வைத்தியசாலையில் இருந்து 88 பேர், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் இருந்து 52 பேர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இருந்து 50 பேர், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இருந்து இருந்து 45 பேர், இரணவில சிகிச்சை மையத்தில் இருந்து 40 பேர், லுனாவ மற்றும் கொழும்பு கிழக்கு தள வைத்தியசாலையிலிருந்து 30 பேர், ஐ.டி.எச் இலிருந்து 20 பேர், இங்கிரிய மாவட்ட வைத்தியாலையில் இருந்தும் 19 பேர், கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து 11 பேர், ரம்புக்கன வைத்தியசாலையிலிருந்து 4 பேர், மினுவாங்கொட மற்றும் அம்பன்பொல வைத்தியசாலைகளிலிருந்து தலா 2 பேர், குணமடைந்து வெளியேற்றினர்.
நேற்று 239 கொரோனா தொற்றாளர்களை கண்டறிந்ததன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,663 ஆக அதிகரித்துள்ளது.
மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,185 ஆக உயர்ந்தது.
405 பேர் கொரோனா சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.