Breaking News



இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மூன்று ஜனாதிபதிகள் ஆளும் கட்சியின் சபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் பங்கேற்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (19) நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இருந்தார்.

அவர்களுடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விவாதத்தில் பங்கேற்றார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ 2005 முதல் 2015 வரை இரண்டு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியாக பணியாற்றினார்.

மேலும் மைத்திரிபால சிறிசேன 2015 முதல் 2019 வரை ஜனாதிபதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.