Breaking News


நேற்று (16) நாட்டில் 387 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,674 ஆக உயர்ந்தது.

இதன்மூலம், அதிக கொரொனா நோயாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 99வது இடத்திற்கு இலங்கை முன்னேறியது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 382 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். உபண்டாவிலிருந்து நாடு திரும்பிய 4 பேர், துருக்கியிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்மூலம், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி தொற்று 14,170 ஆக உயர்ந்தது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 11,806 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 311 நபர்கள் குணமடைந்து வெளியேறினர்.

நாடு முழுவதுமுள்ள 54 சிகிச்சை மையங்களில் 5,807 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் 464 பேர் கண்காணிப்பில் உள்ளனர்

No comments

Note: Only a member of this blog may post a comment.