Breaking News


வெளிநாடுகளில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 90 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் 74 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் சவுதி அரேபியாவில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், அந்த உடல்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, நேரடியாக அருகிலுள்ள தகனசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களின் இறுதிச்சடங்கில் மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்பும் செயல்முறை தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், 125 நாடுகளைச் சேர்ந்த 44, 033 இலங்கையர்கள் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17,600 பேர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்னும் 56,000 இலங்கையர்கள் நாடு திரும்ப காத்திருக்கிறார்கள்.

நாடு ரீதியாக உயிரிழந்தவர்கள் விபரம்-

சவுதி அரேபியா- 31
குவைத்- 20
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)- 10
கட்டார்- 6
பிரித்தானியா (UK)- 5
ஓமான்- 4
அமெரிக்கா- 4
கனடா- 4
பஹ்ரைன்- 2
ஜேர்மனி- 2
இஸ்ரேல்- 1
இத்தாலி- 1

No comments

Note: Only a member of this blog may post a comment.