Breaking News



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி தேசியத்தலைவர்66 # என்ற 'ஹாஷ்டக்' (Hashtag) ட்ரெண்டாகி வருகின்றது.

தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் இளைஞர்கள் இந்த 'ஹாஷ்டக்கை ட்ரென்டாக்கி வருகின்றார்கள்.

#HBDLeaderPrabhakaran66 #HBDதேசியத்தலைவர்66 #HBDTamilsLeaderPrabhakaran

போன்ற ஹாஷ்டக்கள் ட்விடர் மற்றும் சமூகவலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக முன்னிலையாகி வருகின்றன. 

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

குறிப்பாக புலம் பெயர் தேசங்களில் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றார்கள். பிரித்தானியா, சுவிஸ், பிரான்ஸ் போன்ற தேசங்களில் தமிழ் மக்கள்செறந்து வாழும் இடங்களில் பிரபாகரனின் பிரமாண்டமான உருவப்படங்களை காட்சிப்படுத்தி தமது அன்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

தமிழர்கள் பணிபுரியும் இடங்களில் வேறு இன மக்களுக்கு கேக் மற்றும் உணவுப் பண்டங்கள் பரிமாறி தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றார்கள்

No comments

Note: Only a member of this blog may post a comment.