கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்னவென்றால் மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை,மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிப்பதாகும்.
மேலும் எம் முன்னோர்கள் அடிக்கடி கூறும் பழமொழி “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று, அதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும் இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.
விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி,
தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும் என்பது விதியாகும், அப்படியாக எம்பெருமானை தரிசித்து விரத நற்பலன்களை அடைந்து, இஷ்ட சித்திகளை பெற்றுய்வோம்..!
'அருவமும் உருவமுமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரும்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய'
(பாடல்- கந்த புராணம் - கச்சியப்பர்)
#murugan #kanthasasti
No comments
Note: Only a member of this blog may post a comment.