மஹர சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்துராகம மருத்துவமனையில் 04 சடலங்களும் காயமடைந்த 24 கைதிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றிரவு 9.55 மணியளவில் மற்றுமொரு முப்பாக்கிசூட்டு சத்தங்கள் கேட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இதனிடையே சிறைச்சாலையில் பரவிய தீ யை கட்டுப்படுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க அமைச்சக செயலாளர் தலைமையிலான குழுவை நியமித்துள்ளதாக சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சுதெரிவித்துள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.