Breaking News


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்வதால் இருபத்தி நான்கு (24) பொலிஸ் பிரிவுகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி கம்பஹா மாவட்டத்தில் 07 பொலிஸ் பிரிவுகளும், கொழும்பு மாவட்டத்தில் 17 பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் இரண்டு கிராம சேவகர் பிரிவிலும் முடக்கல்நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகள் வருமாறு

கம்பஹா மாவட்டம்: பேலியகொட, வத்தளை, ஜா எல, கடவத்த, ராகம, நீர்கொழும்பு மற்றும் களனி பொலிஸ் பிரிவுகள்

கொழும்பு மாவட்டம்: வூல்ட்பெண்டல், கேசல்வத்த, மாளிகாவத்த, போர்ஷோர், முத்வால், கொட்டஹேனா, மட்டக்குளிய, புளூமெண்டல், கிராண்ட்பாஸ், தெமட்டக்கொட, பொரெள்ள, வெல்லம்பிட்டி, மருதானை, கொழும்பு கோட்டை, பெட்டா, மற்றும் டாம் வீதி பொலிஸ் பிரிவுகள்.

கொழும்பு மாவட்டம்: அங்குலானா வடக்கு மற்றும் அங்குலானா தெற்கு கிராம சேவகர் பிரிவுகள்

No comments

Note: Only a member of this blog may post a comment.