Breaking News


இந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்திற்கு பெருமளவான அமைச்சர்கள் படையெடுக்கிறார்கள்.  கிட்டத்தட்ட 16 இராஜாங்க அமைச்சர்களும், 7 இராஜாங்க அமைச்சர்களும் 2 நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான கூட்டங்கள் எதிர்வரும் 6,8ஆம் திகதிகளில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

6ஆம் திகதி கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ச, டலஸ் அழகப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருடன், 7 இராஜாங்க அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.

8ஆம் திகதி கூட்டத்தில் அமைச்சர்கள் ஜி.எல்.பீரிஸ், பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ச ஆகியோருடன், 9 இராஜாங்க அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இரண்டு நாட்களும் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் தெரிவான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.