லண்டனில் ஈழத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அறியமுடிகிறது. மன்னாரிலிருந்து லண்டன் சென்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனாவிற்கு மத்தியில் கடந்த மாதம் லண்டன் சென்ற 20 வயது மதிக்கதக்க இளைஞர், அங்கு நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார்,
இந்த நிலையில் வவுனியாவை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் தொடர்பை துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மன விரக்தியில் இலங்கையிலிருந்து வெளிநாடு சென்ற நிலையில் லண்டனில் ஒருவரும் இல்லாத சூழ்நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.
No comments
Note: Only a member of this blog may post a comment.