அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு பத்து இலட்சத்து ஐந்தாயிரத்து 307பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 15ஆயிரத்து 767பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 21ஆயிரத்து 576பேர் பாதிக்கப்பட்டதோடு, 386பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 13ஆயிரத்து 440பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 826பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறு இலட்சத்து 76ஆயிரத்து 100பேர் குணமடைந்துள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.