Breaking Newsசுழிபுரம் , குடாக்கனை கிராமத்தில் நேற்று இரவு இரண்டு வேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் . இரண்டு குடும்பங்களிற்கிடையிலான பகை , சினிமாவை மிஞ்சும் வகையில் கொடூர கொலையாக இடம்பெற்றுள்ளது . கொலையில் முடிந்த இந்த பகையின் மூலம் ஒரு 18 வயதான யுவதி விவகாரம்தான் . சின்னவன் செல்வம் ( 56 ) , இராசன் தேவராசா ( 31 ) ஆகிய இருவருமே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் . கொல்லப்பட்ட தேவராசாவின் சகோதரன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அவரது கண்ணெதிரிலேயே , சகோதரனை வெட்டிக் கொன்றுள்ளனர் . கொலை விவகாரம் தொடர்பாக கிராம மக்கள் , பொலிசாருடன் பேசியதில் கிடைத்த தகவல்களை தொகுத்து தருகிறோம் . தீராக குடும்பப்பகை வெட்டிக் கொல்லப்பட்ட சின்னவன் செல்வன் , அவரின் சகோதரியின் மகனான இராசன் தேவராசா ஆகியோரின் உறவு முறையானவர்களே இந்த கொலையை செய்துள்ளனர் . ஒரு சிறிய கிராமமான அங்கு , அனேகமானவர்கள் உறவினர்கள் .

என்னதான் சட்டங்கள் , கட்டுப்பாடுகள் இருந்தாலும் கசிப்பு வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது . பல கிராமங்களில் இன்றும் கசிப்பு வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது . அப்படியொரு கசிப்பு கோட்டையே யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் மத்தியிலுள்ள குடாக்கணை கிராமம் . பல வருடங்களாக அங்கு கசிப்பு வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது . அங்கு கசிப்பு வியாபாரத்தை துணிந்து முன்னெடுக்கிறார்கள் . காரணம் , சில சட்டத்தரணிகள் . அதில் முக்கியமான ஒருவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சார பீரங்கியாக செயற்படுகிறார் . கிராம மக்கள் கூட்டாக அவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள் . கசிப்பு காய்ச்சுபவர்களின் கடவுளாக அவர் செயற்படுவதாக கிராமம் முழுவதும் குற்றச்சாட்டு உள்ளது . அந்த பகுதியின் பிரபல கசிப்பு வியாபாரியான வசீகரன் என்பவர் , சின்னவன் செல்வத்தின் மூத்த மகளை திருமணம் செய்தார் . அவர்கள் சில காலம் தம்பதியாக வாழ்ந்து வந்தனர் . மனைவி கர்ப்பிணியாக இருந்த போது- சுமார் 4 மாதங்களின் முன்னர் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது .

கள்ளக்காதலி வேறு யாருமல்ல . அவரது மனைவியின் சகோதரியான 18 வயதான யுவதியே . மனைவி குழந்தைப் பேற்றை எதிர்பார்த்து தாயார் வீட்டிற்கு வந்து தங்கியிருந்த போது , மனைவியின் தங்கையுடன் தலைமறைவானார் . இதையடுத்து , அவரை தேட சின்னவன் செல்வத்தின் தரப்பினர் தீவிரமாக அவரை தேட ஆரம்பித்தனர் . அப்போது , அவர்களிற்கும் , ஓடிப்போன வசீகரனின் நெருங்கிய உறவினர்களிற்குமிடையில் பகை ஏற்பட்டது . ( செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்பக்கத்தை பாருங்கள் ) இது தீராத பகையாக இரண்டு தரப்பிற்குமிடையில் நீடித்தது . வசீகரன் ஊரைவிட்டே தலைமறைவானார் . அவர் எங்கோ ஒரு இடத்தில் 18 வயதான மனைவியின் தங்கையுடன் குடும்பம் நடத்தி வருகிறார் . முதல் மரணம் கொஞ்சம் பின்தங்கிய ... ஒரே உறவினர்களான ... கசிப்பு கோட்டையென்றால் கேட்கவும் வேண்டுமா ? எதிர்ப்படும் நேரங்களில் எல்லாம் மோதிக் கொண்டார்கள் . சர்ச்சைப்பட்டார்கள் .

இப்படித்தான் இரண்டு மாதங்களின் முன்னர் ஒரு சர்ச்சையேற்பட்டது . இரண்டு தரப்பினரும் ஒரு முறை மோதிக் கொண்டிருந்தபோது , தலைமறைவான வசீகரனின் சித்தப்பா கற்கண்டு என்பவர் தலையிட்டு சமரசம் செய்ய முயற்சித்தார் . இதன்போது , கொலையான சின்னவன் செல்வன் தரப்பை சேர்ந்த ஒருவர் , வசீகரனின் சித்தப்பாவின் நெஞ்சில் கையை வைத்து தள்ளி விட்டுள்ளார் . நோயாளியாக கற்கண்டு , நிலத்தில் விழுந்த அதிர்ச்சியில் உயிரிழந்தார் . இது , இரண்டு தரப்பு மோதலை உக்கிரப்படுத்தியது . திட்டமிட்ட கொலை நேற்று இரவு இடம்பெற்ற இரட்டை கொலையும் திட்டமிட்ட கொலைகளே . அதில் பொலிசாரும் சந்தேகம் தெரிவிக்கவில்லை . சம்பவங்களை பார்க்கும்போது , திட்டமிட்ட கொலையென்பது தெரிகிறது . நேற்று இரவு இந்த மோதல் ஆரம்பித்தது . சுமார் 15 பேர் வரையிலான வன்முறை கும்பல் பயங்கர கத்தி , பொல்லுகளுடன் கொலைக்கான திட்டமிடலுடன் அந்த பகுதிக்கு வந்துள்ளனர் . மாடு வெட்ட பயன்படுத்தும் கத்திகளையே வன்முறை கும்பல்

பயன்படுத்தியுள்ளது . பறாலை வீதியிலுள்ள குமார் கடைக்கு முன்பாக கொலைக்கும்பல் வந்து நின்றபோது , இரவு 7.30 மணியளவில் கள்ளுசீவிவிட்டு சிவகுமார் என்பவர் ( செய்திகளை தெரிந்து கொள்ள தமிழ்பக்கத்தை பாருங்கள் ) அந்த வீதியால் வந்தார் . கொலையுண்ட சின்னவன் செல்வத்தின் மூத்த சகோதரியின் மகன் அவர் . அவரை வழிமறித்து கண்மூடித்தனமாக வெட்டி , நடு வீதியில் வீழ்த்தியது அந்த கொலைக்கும்பல் . அவர்கள் அட்டகாசத்தை ஆரம்பித்ததும் , பிரதேசவாசிகள் பலர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாக தெரிவிக்கிறார்கள் . ஆனால் பொலிசார் வரவில்லை . அவர்களின் இலக்கு , வெட்டப்பட்ட சிவகுமாரின் சகோதரன் தேவராசா . அந்த பகுதியை சேர்ந்த தேவராசா தற்போது உரும்பிராயில் திருமணம் செய்து வாழ்கிறார் . அவரது தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தி , சகோதரனை நடுவீதியில் வெட்டி வீழ்த்தியுள்ளதாகவும் , உடனடியாக அங்கு வருமாறும் அழைத்துள்ளனர் . அவர் உடனடியாக மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார் . அதாவது வட்டுக்கோட்டை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு , அவர்கள் அங்கு செல்வதற்கு முன்னதாக , உரும்பிராயிலிருந்து தேவராசா அங்கு சென்றார் .

அவருக்காக காத்திருந்த கும்பல் நடுவீதியிலேயே வெட்டிக் கொன்றது . கொலைவெறிக் கும்பல் அந்த பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்தது . பின்னர் , அங்கிருந்து சின்னவன் செல்வத்தின் வீட்டிற்கு சென்றது . கும்பல் அட்காசம் செய்தபடி வந்ததை அவதானித்த செல்வம் வீட்டிற்குள் நுழைந்து கதவைப் பூட்டி விட்டார் . வாசலில் நின்றபடி கத்திக்கூச்சலிட்ட கும்பல் வீட்டின் மீது கல்லெறிந்து , செல்வத்தை வெளியில் வரும்படி கூச்சலிட்டது . வீட்டிலிருந்த பெண்கள் அச்சத்தில் சத்தமாக அழ தொடங்கியுள்ளனர் . ஆனால் கொலைக்கும்பலின் அட்டகாசம் ஓயவில்லை . தொடர்ந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் . வீட்டிற்குள்ளும் அச்சம் , வெளியிலும் கொலைக்கும்பல் என்ற இக்கட்டான நிலைமையில் , வீட்டிற்குள்ளிருந்து வெளியில் வந்துள்ளார் செல்வம் . கொலைக்கும்பல் அவரை பலமாக தாக்கி , இரண்டு கைகளையும் வெட்டியுள்ளது . உடலிலும் பலமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன . ( செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்பக்கத்தை பாருங்கள் ) கொலைக்கும்பல் அங்கிருந்து சென்ற பின்னர் , அவரை உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் . எனினும் ,

கசிப்பை கட்டுப்படுத்துங்கள் இந்த கொலைக்கான தூண்டல் காரணம் ஒரு குடும்ப விவகாரமாக இருந்தாலும் , சுழிபுரம்- குடாக்கனையில் நடந்த முதல் கொலை இதுவல்ல . அங்கு அண்மைய கசிப்பு காய்ச்சும் கும்பலொன்று அங்கு தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறது . இந்த கும்பல் குடாக்கனை கிராமத்தை அச்சுறுத்தி கட்டுப்பாட்டில் வைத்துள்ளது . இது குடும்ப விவகாரமென்பதால் , தமது உறவினர்களையே வெட்டிக் கொன்றுள்ளது . குடும்ப விவகாரத்திற்கு அப்பால்- சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து தகவல் வழங்குபவர்கள் , அநீதியை தட்டிக் கேட்பவர்களையும் இந்த கும்பல் அச்சுறுத்தியும் , தாக்கியும் வருகிறது . இதனால் , கொலைச்சம்பவம் குறித்து தகவல் திரட்ட ஆரம்பித்ததும் தமிழ்பக்கத்துடன் பேசுவதற்கு அனேக கிராம மக்கள் மறுத்து விட்டார்கள் . " தம்பியவை ... அவங்கள் பயங்கரமானவர்கள் . எங்களிற்கு ஏன் வில்லங்கம் . ஏதுமென்றால் வந்து வெட்டிச்சரித்து விட்டு போய் விடுவார்கள் . நேற்று இரண்டு பேரை வெட்டியதை போல " என மிரட்சியுடன் பதிலளித்து விட்டு , ஒதுங்கி விட்டனர் .

இந்த பகுதியில் கசிப்பு முதலான சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கை.

No comments

Note: Only a member of this blog may post a comment.