கிளிநொச்சி வைத்தியசாலையில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த 72 வயது முதியவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
5 வைத்தியர்கள், 5 தாதிகள், 4 வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
இதேவேளை, அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களைப் பணிக்குத் திரும்புமாறு
பணிப்பாளர் தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுப்பதாகவும், அவர்கள்
பணிக்குத் திரும்பி அவர்கள் ஊடாக கொரொனா சமூகத்தில் பரவினால் அதற்குப்
பொறுப்புக் கூறுவது யார் எனவும் வைத்தியசாலை ஊழியர்கள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 72 வயது முதியவருடன், உளநல சிகிச்சை பெற வந்த ஒருவரை ஒன்றாக தங்க வைக்கப்பட்டிருந்த தகவல் நேற்று வெளியாகி இருந்தது
அவர் தற்போது கடும் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என கருதப்பட்டு
தனிமைப்படுத்தும் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
விடயம் ஊடகங்களில் பகிரங்கமாகியதால் இன்று அவசர அவசரமாக கடும் தொற்றுக்கு ஆளாகியதாக நம்பப்படும் மேற்படி நோயாளிக்கு சிகிச்சை முடிந்ததாக கூறி வீட்டிற்கு அனுப்புவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் முற்பட்டதாகவும்,
விடயமறிந்து மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தினர் இம் முயற்சியைத் தடுத்து
நிறுத்தியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
கொரொனா நோயாளருக்கு உரிய முற்பாதுகாப்புடன் சிகிச்சை வழங்காது
அசண்டையீனமாகச் செயற்பட்ட விடயம் வெளியாகிவிடக்கூடாது எனக் கடும்
பிரயத்தனப்பட்ட வைத்தியசாலை நிர்வாகமானது தற்போதும் பொதுமக்கள் மற்றும்
பணியாளர்களது பாதுகாப்பினைக் கருத்திற் கொள்ளாது மோதல் போக்கில்
செயற்படுவதாக பணியாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
வடக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களை மீறித் தொடர்பிணைப்பு
வழிகளுக்கு (Chanel of Communication) முரணாகப் பொது வைத்தியசாலைப்
பணிப்பாளர்கள் செயற்பட்டு வருவதாகப் பரவலான குற்றச்சாட்டுகள்
அண்மைக்காலத்தில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.