சற்றுமுன் 09 திகதி வரை ஊரடங்கு அமுல் : இராணுவத் தளபதி - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

சற்றுமுன் 09 திகதி வரை ஊரடங்கு அமுல் : இராணுவத் தளபதி


மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்பொருட்டு, ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயலனியின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னதாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட 68 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட 68 பொலிஸ் பிரிவுகளில் முன்னதாக  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.